விபத்தில் என்ஜினீயர் பலி


விபத்தில் என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 24 Feb 2022 1:16 AM IST (Updated: 24 Feb 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக பலியானார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 37). கோவையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு கனகா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்ற சதீஷ்குமார் இரவில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது விருதுநகர் சாலையில் தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென சாலையை கடந்த காட்டுப்பன்றிகள் சதீஷ்குமார் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார், சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story