பெங்களூருவில் நகைக்கடையில் 2 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்கள்
பெங்களூருவில் சுவரில் துளையிட்டு நகைக்கடையில் புகுந்து 2 கிலோ தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் நடந்து உள்ளது
பெங்களூரு:
.
சுவரில் துளையிட்டு...
பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தனிசந்திரா மெயின் ரோட்டில் ஸ்ரீராகவேந்திரா என்ற பெயரில் ஒரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு உரிமையாளரும், அங்கு வேலை செய்து வரும் ஊழியர்களும் வீட்டிற்கு சென்று விட்டனர்.
நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அந்த நகைக்கடைக்கு வந்த மர்மநபர்கள் சிலர், சுவரை துளையிடும் எந்திரத்தை பயன்படுத்தி நகைக்கடையின் சுவரில் துளையிட்டு கடைக்குள் புகுந்தனர். பின்னர் நகைக்கடையில் இருந்த கண்ணாடி பெட்டிகளை திறந்த மர்மநபர்கள் அதில் வைக்கப்பட்டு இருந்த நகைகளையும், கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
2 கிலோ தங்க நகைகள் கொள்ளை
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் நகைக்கடையின் சுவரில் துளையிடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நகைக்கடை உரிமையாளருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த உரிமையாளர், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சம்பவம் குறித்து ஹெண்ணூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
அந்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் சம்பவம் நடந்த நகைக்கடையை பார்வையிட்டனர். மேலும் நகைக்கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்று கொண்டனர். போலீஸ் விசா ரணையில், நகைக்கடையில் இருந்து மர்மநபர்கள் 2 கிலோ தங்க நகைகளை கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story