மனைவி இறந்த துக்கத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு கணவர் தீக்குளித்து தற்கொலை
சென்னிமலை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு கணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னிமலை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு கணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மனைவி சாவு
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சத்தி ரோட்டை சேர்ந்தவர் சங்கர் (வயது 37). இவர் சென்னிமலை அருகே பி.காசிபாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பரிமளா. கடந்த 7-ந் தேதி பரிமளா ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சங்கர் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தார்.
அளவற்ற பாசம் வைத்த மனைவியை இழந்ததால் இனி வாழ்ந்து என்ன பயன் என்று தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
தீக்குளிப்பு
இதனால் கடந்த 21-ந் தேதி பி.காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தான் தங்கி இருந்த வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு சங்கர் தனக்குத் தானே தீ வைத்து கொண்டார்.
இதனால் உடல் கருகி அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
பெற்றோரை இழந்த குழந்தைகள்
மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சங்கர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சங்கருக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். தாயை விபத்தில் பறிகொடுத்த குழந்தைகள், தற்போது தந்தையையும் இழந்துவிட்டார்கள். இது அவர்களின் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story