தினத்தந்தி புகாா் பெட்டி
பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் புகாா் பெட்டி பகுதி
பள்ளிக்கூட சுவர் சீரமைக்கப்படுமா?
கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் மேட்டு வளவு என்ற இடத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கூட சுற்றுச்சுவர் இடிந்தும், சுவர் விரிசல் விழுந்தும் காணப்படுகிறது. இடிந்த இடத்தில் முள்வேலி போட்டுள்ளனர். விரிசல் ஏற்பட்ட சுவர் எப்போது இடிந்து விழுமோ ?என்ற அச்சத்தில் மாணவ-மாணவிகள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஆபத்தான நிலையில் காணப்படும் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாதன், கோபி
வீணாகும் குடிநீர்
கொடுமுடி-காங்கேயம் செல்லும் ரோட்டில் உள்ளது கணபதிபாளையம். இங்குள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குழாய் அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கணபதிபாளையம்.
சாக்கடை வடிகால் கட்டப்படுமா?
ஈஞ்சம்பள்ளி ஊராட்சி கீரமடை கிராமம் தவசியப்பன் கோவில் தெருவில் சாக்கடை வடிகால் கட்டப்பட்டது. ஆனால் பணி பாதியில் விடப்பட்டதால் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே பாதியில் நிறுத்தப்பட்ட சாக்கடை வடிகால் கட்டும் பணியை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர். பாலமுருகன், கீரமடை.
ஆபத்தான குழி
ஈரோடு நகரப்பகுதியில் முக்கியமான பகுதி பன்னீர்செல்வம் பூங்கா ஆகும். இந்தப்பகுதி மாலை வேளைகளில் பரபரப்பாக காணப்படும். இங்கு திருவேங்கடசாமி வீதி செல்லும் ரோட்டில் ஆபத்தான குழி ஒன்று உள்ளது. இந்த ரோடு வழியாக வாகனங்களில் செல்பவர்கள் இந்த குழியில் விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த குழியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
------------
Related Tags :
Next Story