நெல்லை:பெண்ணுக்கு கொலை மிரட்டல்-ஒருவர் கைது


நெல்லை:பெண்ணுக்கு கொலை மிரட்டல்-ஒருவர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2022 3:04 AM IST (Updated: 24 Feb 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பேட்டை:
நெல்லையை அடுத்த அத்திமேடு இந்திரா காலனியை சேர்ந்தவர் சங்கரம்மாள் (வயது 47). இவருக்கும் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்புகுட்டி மகன் குமார் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் குமாரும், அவரது உறவினரான திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் விஜி (25) என்பவரும் சேர்ந்து சங்கரம்மாளை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். விஜியை தேடி வருகின்றனர்.

Next Story