துபாய் செல்லும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நிறுத்தம்


துபாய் செல்லும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நிறுத்தம்
x
தினத்தந்தி 24 Feb 2022 5:39 PM IST (Updated: 24 Feb 2022 5:39 PM IST)
t-max-icont-min-icon

துபாய் செல்லும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் போன்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகள் 6 மணி நேரத்திற்கு முன் கொரோனா நோயை கண்டறிய உதவும் ரேபிட் பரிசோதனை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவு இருந்ததால் தான் நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் என துபாய் அறிவித்து இருந்தது. இதனால் கடந்த ஒராண்டாக சென்னை விமான நிலையத்தில் ரேபிட் பரிசோதனை மையம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் துபாய் போன்ற நாடுகளுக்கு வரக்கூடிய பயணிகளுக்கு 6 மணி நேரத்திற்கு முன் ரேபிட் பரிசோதனை முடிவு தேவை இல்லை என்றும், துபாய் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அங்கேயே இலவசமாக ரேபிட் பரிசோதனை செய்யப்படும் எனவும் துபாய் அரசு அறிவித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் ரேபிட் பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சென்னைக்கு வரக்கூடிய பயணிகளுக்கு சதவீத அடிப்படையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என்பதால் பரிசோதனை மையம் தொடர்ந்து இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story