சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்


சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2022 5:41 PM IST (Updated: 24 Feb 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகில் பாலியப்பட்டு ஊராட்சியில் கடந்த டிசம்பர் மாதம் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வருவாய்த்துறையினர் மூலம் நிலம் கையகப்படுத்த நிலங்கள் பார்வையிடப்பட்டது. 

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூலம் சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்ந்து 65-வது நாளான போராட்ட நாளையொட்டி திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்காவில் இருந்து வேலூர் சாலையில் சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

 இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் கைகளை கோர்த்தப்படி நின்று சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். 

பாலியப்பட்டு ஊராட்சியில் சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும். இயற்கை வளங்கள், விளை நிலங்கள் குடியிருப்புகள் சுற்றுச்சூழலை அழித்து சிப்காட் வேண்டாம். அரசு மற்றும் தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

போராட்டத்தில் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story