வீடு, தோட்டத்துக்குள் புகுந்த பாம்புகள்


வீடு, தோட்டத்துக்குள் புகுந்த பாம்புகள்
x
தினத்தந்தி 24 Feb 2022 9:21 PM IST (Updated: 24 Feb 2022 9:21 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே வீடு, தோட்டத்துக்குள் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டன.

பட்டிவீரன்பட்டி:

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு அதே பகுதியில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்துக்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதுகுறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த 12 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்பு படையினர் லாவகமாக பிடித்தனர். 

இதேபோல் மரியாயிபட்டியில் உள்ள கோபிநாதனின் வீட்டுக்குள் பதுங்கி இருந்த 9 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். இந்த 2 பாம்புகள் தாண்டிக்குடி மலைப்பகுதியில் விடப் பட்டது

Next Story