மகளிர் குழுக்களுக்கு ஊட்டச்சத்து தயாரிக்கும் விழிப்புணர்வு போட்டி


மகளிர் குழுக்களுக்கு ஊட்டச்சத்து தயாரிக்கும் விழிப்புணர்வு போட்டி
x
தினத்தந்தி 24 Feb 2022 10:04 PM IST (Updated: 24 Feb 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் குழுக்களுக்கு ஊட்டச்சத்து தயாரிக்கும் விழிப்புணர்வு போட்டிநடந்தது.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ள வெங்குப்பட்டு கிராமத்தில் மகளிர் குழுக்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் தயாரிக்கும் விழிப்புணர்வு போட்டி வட்டார இயக்கம் சார்பில் நடைபெற்றது. வட்டார இயக்க மேற்பார்வையாளர் அலமேலு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் உமா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் ஒன்றிய குழு உறுப்பினர் வெங்குப்பட்டு ராமன் கலந்து கொண்டு நம் பாரம்பரிய உணவுகள் குறித்தும், அதில் உள்ள ஊட்டச்சத்து குறித்தும், உணவுகளின் நன்மைகள்குறித்தும் விளக்கினார்.

தொடர்ந்து 11 மகளிர் குழுக்கள் தயாரித்து வைத்திருந்த ஊட்டச்சத்து உணவுகளை பார்வையிட்டு மூன்று மகளிர் குழுக்கள் வெற்றிப்பெற்றதாக அறிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் தரணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வரி, வார்டு உறுப்பினர் பூபாலன் மற்றும் மாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story