வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
x
தினத்தந்தி 24 Feb 2022 10:38 PM IST (Updated: 24 Feb 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

மாசிமக திருவிழாவையொட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

வேதாரண்யம்:
 வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவிற்கு தேரோட்டம், தெப்பத்திருவிழா, திருக்கதவு திறக்க அடைக்க பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக சந்திரசேகரசாமி, மனோன்மணி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினர்.  இதில் ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், யாழ்ப்பாணம் வரணீ ஆதீனம் பண்டார சந்நிதி, நகராட்சி பொறியாளர் மனோகரன், காலபைரவர் வழிபாட்டு குழு தலைவர் தம்புசாமி உள்பட திரளான பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story