அதிக வருவாய் கொடுக்கும் பப்பாளி சாகுபடி
மடத்துக்குளம் பகுதியில் குறைவான பாசன நீரில் அதிக வருவாய் கொடுக்கும் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மடத்துகுளம்
மடத்துக்குளம் பகுதியில் குறைவான பாசன நீரில் அதிக வருவாய் கொடுக்கும் பப்பாளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பாசனநீர் பற்றாக்குறை
நெல், கரும்பு, மக்காச்சோளம், காய்கறி மற்றும் இதர வகை பயிர்களுக்கு பாசன நீர் கூடுதலாக தேவைப்படுகிறது. மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில் பல ஏக்கர் விளைநிலங்களுக்கு போதிய பாசனநீர் கிடைப்பதில்லை.
கிணற்று பாசனத்தை நம்பி பயிர் சாகுபடியில் ஈடுபட வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் பாசன நீர் குறைவாக தேவைப்படும் பப்பா ளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டு முழுவதும் பலன்
ஒரு ஏக்கர் பரப்பில் 600 பப்பாளி கன்றுகள் வரை நடவு செய்ய முடி யும். நிலத்தை பராமரித்து, உழவு செய்து கன்றுகள் நடவு செய வது தொடங்கி வளர்ந்து மரமாகி காய்க்க தொடங்கும் வரை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. 10 மாதத்திலிருந்து பப்பாளி பழங்கள் பறிக்கத்தொடங்கலாம். 20 முதல் 25 மாதங்கள் வரை தொடர்ந்து மகசூல் கொடுக்கும்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- குறைந்த அளவு பாசன நீர் பப்பாளி சாகுபடிக்கு போதுமானதாகும். எளிமையான பராமரிப்பானதால், விவசாய தொழிலாளர் தேவையும் குறைவுதான். பப்பாளிக்கு ஆண்டு முழுவதும் தேவை உள்ளதால் விலையும் சீராக கிடைக்கிறது. இங்கு பறிக்கப்படும் பழங்கள் அருகில் உள்ள மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பப்பாளி சாகுபடி ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு பலன் கொடுக்கிறது'.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story