14 மாணவர்கள் உக்ரைன் நாட்டில் ரெயில்வே சுரங்கப்பாதையில் தஞ்சம்


14 மாணவர்கள் உக்ரைன் நாட்டில்  ரெயில்வே சுரங்கப்பாதையில் தஞ்சம்
x
தினத்தந்தி 24 Feb 2022 11:22 PM IST (Updated: 24 Feb 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தை சேர்ந்த 14 மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் தஞ்சம் அடைந்துள்ளனர். 
உக்ரைனுக்கு சென்ற மாணவர்கள்
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முடிவு செய்ததாலும், ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாக செயல் பட்டதாலும் உக்ரைன் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. 
உக்ரைன் நாட்டில் ஏராளமான தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 14 மாணவர்களும் அடங்குவர். அவர்கள் அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றின் சுரங்கப்பாதையில் தஞ்சம் அடைந்திருப்பதாக அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது.
அவர்களில் ஒருவர், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அஞ்சுகாட்டை வாணியேந்தல் பகுதியை சேர்ந்த நவீன். இவர் மருத்துவ படிப்பில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார். நவீன் போன் மூலம் தனது குடும்பத்தினரிடம் கூறியதாவது:-
குண்டுவெடிப்பு
உக்ரைன் நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. கீவ் நகரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் எனது நண்பர்களுடன் தங்கியிருந்தேன். நான் இருக்கும் பகுதியில் 450-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். நானும் எனது நண்பர்களும் 24-ந்தேதி காலையில் விமானத்தில் இந்தியா புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென நான் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு கருதி நாங்கள் தங்கி இருந்த பகுதிகளில் உள்ள மெட்ரோ ெரயில் சுரங்க பாதைக்கு அனைவரையும் அழைத்து சென்று, அங்கு தஞ்சம் அடைந்து இருக்கிேறாம். அச்சத்துடன் இருந்து வருகிறோம். இந்திய மாணவர்கள் நாடு திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடு்த்து சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து எங்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் நவீன், ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆணிமுத்துவின் மகன் ஆவார்.

Next Story