நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டிற்கு எடுத்து வரப்பட்டன
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டிற்கு எடுத்து வரப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோட்டிற்கு எடுத்து வரப்பட்டன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
ஈரோடு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 769 பதவிகளுக்காக 2 ஆயிரத்து 722 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 1,251 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஈரோடு மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரியிலும், இதேபோல் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 13 இடங்கள் என மொத்தம் 14 இடங்களில் கடந்த 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் ஆங்காங்கே பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.
சீல் வைப்பு
இந்த நிலையில் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் எழாத நிலையில் நேற்று முன்தினம் 14 இடங்களிலும் வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாடு எந்திரங்கள் ஆகியவை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் ஈரோட்டிற்கு எடுத்து வரப்பட்டன.
பின்னர் கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை பள்ளிக்கூடம் மற்றும் ரெயில்வே காலனி மேல்நிலை பள்ளிக்கூடத்திலும் உள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைத்து, அந்த அறைகள் சீல் வைக்கப்பட்டன. இவை குறிப்பிட்ட நாட்களுக்கு பாதுகாப்பு அறையில் இருக்கும். அதில் பதிவான வாக்குகள் அகற்றப்படாது. மாநில அல்லது இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் அவற்றில் உள்ள பதிவுகள் அகற்றப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story