சிதம்பரத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சிதம்பரத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2022 11:59 PM IST (Updated: 24 Feb 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம், 

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கண்டித்து அரசியல் கட்சிகள் சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் பூ.சி.இளங்கோவன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் மணிவாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால.அறவாழி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

 ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்வதற்காக சிற்றம்பல மேடையில் ஏறிய ஜெயஷீலா என்ற பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும், அனைத்து பக்தர்களையும் சிற்றம்பல மேடையில் ஏற அனுமதிக்க வேண்டும், சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story