கணவருக்கு 7 ஆண்டு சிறை


கணவருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 25 Feb 2022 1:27 AM IST (Updated: 25 Feb 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கண்ணலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி மகள் வேண்டா என்கிற லட்சுமி (வயது 24). இவருக்கும் செஞ்சி தாலுகா களையூரை சேர்ந்த தனுசு மகன் தாஸ் என்கிற பிரகலாதன் (31) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணமான சில மாதங்களிலேயே லட்சுமியிடம், அவரது கணவர் தாஸ், மாமனார் தனுசு (67), மாமியார் மாரியம்மாள் (53) ஆகிய 3 பேரும், வரதட்சணையாக ரூ.50 ஆயிரம் மற்றும் 2½ பவுன் நகை ஆகியவற்றை வாங்கி தருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்தனர்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த லட்சுமி கடந்த 26.2.2016 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லட்சுமியின் தாய் அல்லியம்மாள், வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாஸ், தனுசு, மாரியம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

7 ஆண்டு சிறை

இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் தாஸ் என்கிற பிரகலாதன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் தனுசு, மாரியம்மாள் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் 2 பேரையும், இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

Related Tags :
Next Story