வீடு புகுந்து நகை திருட்டு


வீடு புகுந்து நகை திருட்டு
x
தினத்தந்தி 25 Feb 2022 1:57 AM IST (Updated: 25 Feb 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வீடு புகுந்து நகை திருட்டு நடைபெற்றது.

மதுரை,

மதுரை மகாலட்சுமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 7 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ அதை திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story