வாலிபர் வெட்டிக் கொலை


வாலிபர் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 25 Feb 2022 2:11 AM IST (Updated: 25 Feb 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

மத்திகிரி அருகே வாலிபரை வெட்டிக் கொலை செய்ததாக 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

மத்திகிரி:-
மத்திகிரி அருகே வாலிபரை வெட்டிக் கொலை செய்ததாக 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர் கொலை 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே பேளகொண்டப்பள்ளி அருகே உள்ளது பெரியமேனா அக்ரஹாரம். இந்த ஊரை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 30). கூலித் தொழிலாளி. இவர் ஓசூர் அருகே குமாரனப்பள்ளி ஏரிக்கரையில் நேற்று முன்தினம் கை, வயிறு, முகம் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டி கொலைசெய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை தொடர்பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேர் கைது 
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணப்பாவை அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (31), ஜாக்கி என்கிற ஜெயகுமார் (25), லச்சு என்கிற லட்சுமி நாராயணன் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் மஞ்சுநாத்தின் உறவுக்கார பெண் ஒருவரை பற்றி கிருஷ்ணப்பா தவறாக பேசியதும், அதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கிருஷ்ணப்பாவை மஞ்சுநாத் தரப்பினர் வெட்டிக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

Next Story