ஹிஜாப் குறித்து ஐகோர்ட்டில் 10-வது நாளாக விசாரணை; சி.எப்.ஐ. அமைப்பு குறித்து கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு குறித்து கர்நாடக ஐகோர்ட்டில் 10-வது நாளாக விசாரணை நடைபெற்றது. சி.எப்.ஐ. அமைப்பு குறித்து அரசு அறிக்கையை தாக்கல் செய்தது.
பெங்களூரு:
தர்ணா போராட்டம்
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். அக்கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை மீறி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த அந்த மாணவிகள் அதே இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
பதிலுக்கு இந்து மாணவர்கள் காவி துண்டு போட்டு வந்தனர். இது தொடர்பாக மாணவர்கள் கடந்த 8-ந் தேதி நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதற்கிடையே முஸ்லிம் மாணவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். தங்களை ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக அனுமதிக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரினர்.
நீதிபதிகள் உத்தரவிட்டனர்
இந்த மனுக்கள் மீது ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சி.எப்.ஐ.) அமைப்பு குறித்தும், ஹிஜாப் விவகாரத்தின் பங்கு குறித்தும் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் முன்னிலையில் நேற்று 10-வது நாளாக ஹிஜாப் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி. சி.எப்.ஐ. அமைப்பு தொடர்பான அறிக்கையை மூடிய சீலிடப்பட்ட கவரில் நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார். அதில் அந்த அமைப்பின் உடுப்பி குந்தாப்புரா அரசு பி.யூ.மகளிர் கல்லூரி ஆசிரியர்களை மிரட்டியதாக அந்த அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரபுலிங்க நாவதகி தெரிவித்தார்.
Related Tags :
Next Story