சேலம் வழியாக சென்ற ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் கைது


சேலம் வழியாக சென்ற ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2022 2:33 AM IST (Updated: 25 Feb 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

சேலம் வழியாக சென்ற ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம்
சென்னை சேர்ந்த 13 வயது சிறுமி தனது தாயாருடன் கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ் - 6 பெட்டியில் பயணம் செய்தனர். ரெயில் சேலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பெட்டியில் கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் பார்த்திபன் (வயது 37) என்பவர் 13 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி பயத்தில் கூச்சல் போட்டார். இதையடுத்து சக பயணிகள் அவரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பார்த்திபனை, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார், சேலம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து சிறுமியிடம் ரெயிலில் சில்மிஷம் செய்த பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story