சுரண்டை: பஸ் மோதி வியாபாரி சாவு
பஸ் மோதி வியாபாரி பரிதாபமாக இறந்தார்
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை அழகாபுரிபட்டணம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் முருகையா மகன் வெங்கடாசலம் (வயது 48). இவர் மிளகாய் வத்தல் மற்றும் பூண்டு மொத்த வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வெங்கடாசலம் சுரண்டை-சேர்ந்தமரம் ரோட்டில் புது மார்க்கெட் அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது சுரண்டையில் இருந்து புளியங்குடி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடாசலம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வெங்கடாசலத்தை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே வெங்கடாசலம் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story