மயிலாப்பூரில் மகா சிவராத்திரி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக மயிலாப்பூரில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று(1-ந்தேதி) சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜோதி வடிவில் சிவன்
இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தி.மு.க. அரசு கோவில் நிலங்கள் மீட்பு, கோவில் திருப்பணிகள், கும்பாபிஷேகம், அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகள், கோவில் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம். அறநிலையத்துறை வரலாற்றில் முதல்முறையாக மகா சிவராத்திரி அன்று 100-க்கும் மேற்பட்ட ஆன்மிக கலைஞர்கள் இணைந்து வருகிற 1-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் (2-ந் தேதி) காலை 6 மணி வரை 12 மணி நேர மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.
மங்கள இசை, தொடக்க விழா, சிவ தரிசனம், பட்டிமன்றம், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், தியானம், பக்தி பாடல்கள், கிராமிய பக்தி இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடக்கிறது. ஆன்மிகம் தொடர்பான 10 விற்பனையகங்களில் தலபுராணம், கோவில் வழிகாட்டி நூல்கள், பழனி பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட உள்ளது.
பக்தர்களுக்கு வசதிகள்
மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை மாடவீதிகளில் நிறுத்தி கொள்ளலாம். கோவில் சார்பாக பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரங்கில் 3 ஆயிரம் பேர் அமர்வதற்கு இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தவும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவில் தேர் மற்றும் தெப்பக்குளங்கள் சீரமைக்க ரூ.100 கோடியை முதல்-அமைச்சர் ஒதுக்கி உள்ளார். அதன்படி படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. புதிய தெப்பக்குளங்களும் அமைக்கும் பணிகளும் தொடங்கப்படவுள்ளது.
அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2 ஆயிரத்து 42 கோடி மதிப்பிலான கட்டிடங்கள், நிலங்கள், குளங்கள் ஆகியவை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளன.
சிதம்பரம் கோவில்
சிதம்பரம் கோவில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி செயல்பட்டு வருகின்றது. அந்த கோவிலில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக இந்து சமய அறநிலையத்துறையின் கவனத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறது. சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அப்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், கமிஷனர் ஜெ.குமரகுருபரன், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. த.வேலு, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் இணை ஆணையர் த.காவேரி, சென்னை மண்டல இணை கமிஷனர் ரேணுகாதேவி உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story