கடலோர காவல்படை அதிகாரியின் மனைவியிடம் பாலியல் தொல்லை - அரசு டாக்டர் கைது


கடலோர காவல்படை அதிகாரியின் மனைவியிடம் பாலியல் தொல்லை - அரசு டாக்டர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2022 5:54 AM IST (Updated: 25 Feb 2022 5:54 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் நடன நிகழ்ச்சியில் கடலோர காவல் படை அதிகாரி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை உத்தமர் காந்தி சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கடந்த புதன்கிழமை இரவு நடந்த நடன நிகழ்ச்சியில், கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் கலந்து கொண்டு நடனம் ஆடினார். நடனம் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, அங்கு நடனம் ஆடிய இளைஞர் ஒருவர், திடீரென கடலோர காவல் படை அதிகாரியின் மனைவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். பலமுறை எச்சரிக்கை விடுத்தபோதும், அந்த இளைஞர் பாலியல் தொல்லையை நிறுத்தவில்லை. அதிகாரி மனைவியிடம் எல்லை மீறி நடக்க ஆரம்பித்தார்.

உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து சென்றனர். அவர் போதையில் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி போராசிரியராக வேலை பார்த்த அரசு டாக்டர் என்று தெரியவந்தது. அவரது பெயர் டாக்டர் சத்யபிரகாஷ் என்பதாகும்.

கைது-பணி இடைநீக்கம்

கடும் போதையில் இருந்த டாக்டர் சத்யபிரகாசிடம் போதை தெளிந்த பிறகு விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது தேனாம்பேட்டை பெண் போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

நேற்று அவர் கைது செய்யப்பட்டார். அவரை பணி இடைநீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.

Next Story