அதிக பாரம் ஏற்றி வந்த 33 வாகனங்களுக்கு ரூ.11 லட்சம் அபராதம்
செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த 33 வாகனங்களை மடக்கி பிடித்து ரூ.11 லட்சம் அபராதம் வசூலித்தனர்.
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி இளமுருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி ஆகியோர் செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிக பாரம் ஏற்றி வந்த 33 வாகனங்களை மடக்கி பிடித்தனர். அந்த வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் அபராதம் வசூலித்தனர். மேலும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
அதேபோல் குன்றத்தூர் பகுதியில் குன்றத்தூர் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி கனரக வாகனங்களின் மீது அதிக பாரம் ஏற்றி செல்ல அமைக்கப்பட்டு இருந்த கூடுதல் பகுதிகளை அகற்றிய பின்பு அந்த வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அத்துடன் கனரக வாகனங்களின் பின் மற்றும் வலது, இடது புறபகுதிகளில் தடுப்புகள் அமைக்காத 4 வாகனங்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் குன்றத்தூர் ஆர்.டி.ஓ. சுந்தரமூர்த்தி, வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story