கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 25 Feb 2022 5:28 PM IST (Updated: 25 Feb 2022 5:28 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சூரியா (வயது 25). 

இவர் செங்கம் சாலை சிங்கமுக தீர்த்தம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்தனர். 

அதேபோல் வேலூர் மாவட்டம் கம்மவன்பேட்டை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பழனி (35). இவர் திருவண்ணாமலை புதுத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்தனர். 

மேற்கண்ட இருவரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.

 இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் சூரியா மற்றும் பழனியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story