பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி பேசினார்.
திருவண்ணாமலை
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி பேசினார்.
கலந்தாய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு, காவல்துறை, மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு உள்ளிட்டவை இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்தல், குறைத்தல், தீர்வுகாணுதல் ஆகியவை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலிதாம்பாள் தலைமை தாங்கினார். உமன் எம்பவர்மெண்ட் டிரஸ்ட் நேசகுமாரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ெரட்டி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாகாளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆண்களும், பெண்களும் சமநிலை
தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி பேசியதாவது:-
பெண்கள் இன்று மட்டும் அல்ல பல நூற்றாண்டுகள் முன்பு இருந்தே போராட்டங்களை கையில் எடுத்து, அதில் பல வெற்றிகளையும் கண்டு உள்ளனர்.
பெண்களால் முடியாது என்பது எதுவும் இல்லை. தற்போது நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர். இதனை வரவேற்கிறேன்.
இயற்கையாகவே ஆண்களும், பெண்களும் சமநிலையில் உள்ளனர். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு பல்வேறு சட்டங்கள் உள்ளது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உதயகுமார், மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அதிகாரி கோமதி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி அலிசபெத்ராணி, சைல்டு லைன் திட்ட இயக்குனர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் தமிழரசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story