மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார்.
திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் கிராமத்தில் வசித்து வந்தவர் மணிவண்ணன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மது அருந்தி உள்ளார். பின்னர் மது போதையில் கைவண்டூர் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்க முயன்றுள்ளார். அப்போது மரத்தின் பாதி தூரம் ஏறிய உடன் திடீரென மேலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைக்கண்ட அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story