2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அம்மன் திருவிழா
ஏலகிரி மலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அம்மன் திருவிழாவில் 14 மலைவாழ் கிராம மக்கள் சக்தி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜோலார்பேட்டை
ஏலகிரி மலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அம்மன் திருவிழாவில் 14 மலைவாழ் கிராம மக்கள் சக்தி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை உள்ளது.
இந்த ஊராட்சி 14 சிறிய மலை கிராமங்களை கொண்டுள்ளது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் ஆதிகாலம் முதல் பாரம்பரிய கலாசாரம் மாறாமல் ஒவ்வொரு கிராமத்திற்கும் அம்மன் கோவில் கட்டி விழா நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள மேட்டுக்கனியூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சக்தி அம்மன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தி வருகின்றனர்.
சீர்வரிசையுடன்
அதன்படி இந்த வருடம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 2-வது நாள் கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மூன்றாவது நாளில் ஏலகிரி மலையில் உள்ள 14 மலை கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி நீண்ட வரிசையில் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து பூஜை செய்து, எருமை, ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு பூஜை செய்து வழிபட்டனர்.
மூன்று நாட்களும் அம்மன்வீதி உலா நடந்தது. பகல் மற்றும் இரவு நேரங்களில் தெருக்கூத்து, பாட்டு கச்சேரி உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
Related Tags :
Next Story