தேவையான பகுதிகளுக்கு சாலைகள் அமைக்க நடவடிக்கை
தேவையான பகுதிகளுக்கு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்னார்குடி ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் டி.மனோகரன் தெரிவித்தார்.
மன்னார்குடி:
தேவையான பகுதிகளுக்கு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்னார்குடி ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் டி.மனோகரன் தெரிவித்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
மன்னார்குடி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் டி.மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.
அதன் விவரம் வருமாறு:-
ஜெயக்குமார் (அ.தி.மு.க): மேலதுளசேந்திரபுரம் மண்சாலையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும். ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாள் வேலை திட்டம் உள்ளிக்கோட்டையில் நடைபெறவில்லை.
பூபதி (இ.கம்யூ): ஓவர்சேரி ஊராட்சி மேலத்தெரு, தெற்குதெரு, அய்யம்பேட்டை பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இந்த மின்கம்பிகளால் மின்விபத்துகள் ஏற்படுகின்றன.
தடையின்மை சான்றிதழ்
எம்.என்.பாரதிமோகன் (தி.மு.க): தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மண் சாலைகளை மேம்படுத்தவேண்டும் என விதிமுறை உள்ளபோது மகாதேவபட்டிணத்தில் தார்சாலைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டதின் கீழ் வீடு கட்டிக்கொள்ள தடையின்மை சான்றிதழை அறநிலையத்துறை அதிகாரிகள் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோவில்வினோத் (அ.தி.மு.க): பரவாக்கோட்டை கால்நடை ஆஸ்பத்திரிக்கு சுற்றுசுவர் கட்டித்தர வேண்டும். உடற்பயிற்சி கூடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சாலைகள் அமைக்க நடவடிக்கை
தலைவர்: தேவையான பகுதிகளுக்கு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை கணக்கெடுப்பதில் உள்ள குறைகள் களையப்பட்டு சரியான முறையில் கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
--
Related Tags :
Next Story