பந்தலூர் அருகே பிளஸ் 2 மாணவர் தற்கொலை


பந்தலூர் அருகே பிளஸ் 2 மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Feb 2022 8:21 PM IST (Updated: 25 Feb 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பந்தலூர்

பந்தலூர் அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிளஸ்-2 மாணவர்

பந்தலூர் தாலுகா அம்பலமூலா அருகே உள்ள தேனம்பாடியை சேர்ந்தவர் வேலாயுதன். இவருடைய மகன் ஆதஸ் (வயது 17). இவர் அம்பலமூலாவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் தினமும் தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி அவருடைய நண்பர்கள் ஆதசை அழைத்துச்செல்வதற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் அவர் இல்லை. 

தூக்குப்போட்டு தற்கொலை

உடனே அங்கு இருந்த ஆதசின் தாயாரிடம் கேட்டனர். உடனே அவர் ஆதஸ் படுத்து இருந்த அறைக்கு சென்றார். அங்கு அந்த அறையின் கதவு மூடப்பட்டு இருந்தது. பலமுறை அவர் கதவை தட்டியும் திறக்கப்பட வில்லை. 

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு ஆதஸ் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த அம்பலமூலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர்கள் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்த ஆதஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story