தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 25 Feb 2022 9:22 PM IST (Updated: 25 Feb 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

உமரிக்காடு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

ஏரல்:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள உமரிக்காடு பிரம்மசக்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மனைவி கவுரி. இவர்களுடைய மகன் சேவாக் (வயது 13). இவன் உமரிக்காட்டில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். காமராஜ் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தாயும், மகனும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சேவாக் பள்ளிக்கு செல்லாமல் ஊருக்கு அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றான். அதன்பிறகு அவன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனை தேடி அவனது தாயார் ஆற்றுக்கு சென்று பார்த்தார். அப்போது சேவாக் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவனது உடலை பார்த்து அவர் கதறி அழுதார். 

இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேவாக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story