உக்ரைனில் சிக்கித்தவிக்கும் வாலாஜா மாணவி அமைச்சர் காந்தியுடன் பேசினார்


உக்ரைனில் சிக்கித்தவிக்கும் வாலாஜா மாணவி அமைச்சர் காந்தியுடன் பேசினார்
x

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் வாலாஜா மாணவி, அமைச்சர் ஆர்.காந்தியுடன் பேசினார். அப்போது தேவையான உதவிகள் செய்து தருவதாக அமைச்சர் கூறினார்.

ராணிப்பேட்டை

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் வாலாஜா மாணவி, அமைச்சர் ஆர்.காந்தியுடன் பேசினார். அப்போது தேவையான உதவிகள் செய்து தருவதாக அமைச்சர் கூறினார்.

வாலாஜா மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியம், நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகள் பூஜா குணசேகர், மற்றும் வடகால் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் மகன் சுபாஷ் சந்திரன் ஆகியோர் உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வருகிறார்கள். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருவதால் மாணவி பூஜா குணசேகர் , மாணவர் சுபாஷ் சந்திரன் ஆகியோர் அங்கு சிக்கித் தவித்து வருகிறார்கள்.
 
போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் உள்ள மாணவ, மாணவிகளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம், மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். 

அமைச்சர் உறுதி

இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, அப்துல்லா எம்.பி.யை தொடர்பு கொண்டு பேசினார்.
மேலும் உக்ரைன் நாட்டில் இருந்து மாணவி பூஜா குணசேகர், வீடியோ கால் மூலம் அமைச்சர் காந்தியிடம் பேசினார். அப்போது அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தருவதாக அமைச்சர் உறுதி அளித்தார். அப்போது மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

Next Story