பவர் டேபிள் கட்டண உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு


பவர் டேபிள் கட்டண உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 9:53 PM IST (Updated: 25 Feb 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

பவர் டேபிள் கட்டண உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

திருப்பூர், 
4-வது சுற்றாக நடந்த பவர் டேபிள் கட்டண உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு
பவர் டேபிள் கட்டண உயர்வை நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தை ஆடை உற்பத்தியாளர்கள் தரப்பில் சைமா சங்கம், தையல் நிறுவனங்கள் தரப்பில் பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் இடையே 3 முறை நடைபெற்றுள்ளது. முதல் ஆண்டு 30 சதவீதம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 15 சதவீதம் என மொத்தம் 75 சதவீதம் கட்டண உயர்வு வழங்க வேண்டும் என்று பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தநிலையில் 4-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று சைமா அரங்கில் நடைபெற்றது. சைமா சங்க பொதுச்செயலாளர் பொன்னுசாமி, செயற்குழு உறுப்பினர் நடராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பவர்டேபிள் உரிமையாளர் சங்க தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால், உதவி செயலாளர் முருகேசன், பொருளாளர் சுந்தரம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
ஒத்திவைப்பு
சைமா சங்க செயற்குழு கூட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் செயற்குழு உறுப்பினர்களுடன் கட்டண உயர்வு குறித்து ஆலோசனை நடத்திய பிறகு அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதாக சைமா சங்கத்தினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story