மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தரையில் அமர்ந்திருக்கிறார்கள்.
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தரையில் அமர்ந்திருக்கிறார்கள்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தரையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு காத்திருக்க இருக்கையுடன் கூடிய மேற்கூரை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
தரையில் அமர்ந்துள்ளனர்
மடத்துக்குளம் தாலுகா அரசு மருத்துவமனை நால்ரோடு பகுதியில் அமைந்துள்ளது. அரசு ஆரம்ப சுகா தார நிலையமாக செயல்பட்ட இது, கடந்த 2015-ம் ஆண்டு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கு பின்பு 57 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு தற்போ து பயன்பாட்டில் உள்ளது. தினசரி இங்கு 300-க்கும் மேற்பட்ட புறநோ யாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். இந்த புற நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக வருபவர்கள் காத்திருக்கவும் போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால் மருத்துவமனையின் வளாகப்பகுதியில் உள்ள பல இடங்களில் தரையில் அமர்ந்து உள்ளனர். இதனால் பலவித சிரமம் ஏற்படுகிறது.
இருக்கை வசதி தேவை
இதுகுறித்து நோயாளிகள் கூறியதாவது:-
மருத்துவமனையில் தங்கி தொடர் சிகிச்சை பெறுபவர்களுடன் இருப் பவர்கள், தினசரி வந்து திரும்பும் புறநோயாளிகள் மற்றும் இவர்களுக்கு துணையாக வருபவர்கள் வளாக பகுதியில் காத்திருப்பது வழக்கம். இவர்களுடன் குழந்தைகள், சிறுவர்களும் வருகிறார்கள்.
இங்கு போதிய அளவு இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர்ந்துதான் இவர்கள் காத்திருக்கின்றனர், பலர் சாப்பிடுகின்றனர். இதனால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதற்கு தீர்வாக மருத்துவமனை வளாகத்தில் மேற்கூரையுடன் கூடிய காத்திருக்கும் இருக்கைகள் மற்றும் சாப்பிடுவதற்கான இடவசதியும் அமைக்க வேண்டும்." இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story