காதல் விவகாரத்தில் வாலிபர் மீது வீடு புகுந்து தாக்குதல்


காதல் விவகாரத்தில் வாலிபர் மீது வீடு புகுந்து தாக்குதல்
x
தினத்தந்தி 25 Feb 2022 10:23 PM IST (Updated: 25 Feb 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

காதல் விவகாரத்தில் வாலிபர் மீது வீடு புகுந்து தாக்குதல்

பொங்கலூர், 
பொங்கலூர் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை வீடு புகுந்து தாக்கியதாக கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாக்குவாதம்
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள நாதேகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபரும், கள்ளிப்பாளையம் அருகே உள்ள வளையபாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வளையபாளையத்திலிருந்து நாதேகவுண்டம்பாளையத்திற்கு சம்பந்தப்பட்ட வாலிபரின் வீட்டுக்கு சிலர் சென்றுள்ளனர். அங்கு தங்கள் ஊரை சேர்ந்த பெண்ணுடன் பேசக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் அடிதடி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து  காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
4 பேர் கைது
இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி நாதேகவுண்டம்பாளையத்தில் நேற்று பொதுமக்கள் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.  
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம்  துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி உள்பட போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்தனர். 
இந்த நிலையில் வளையபாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (வயது 50), அவரது மனைவி தனபாக்கியம் (48), துத்தாரிபாளையத்தை சேர்ந்த கலுங்குராஜ் (25), வளையபாளையத்தை சேர்ந்த கவுதம் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story