சிவாலய ஓட்டத்தையொட்டி திற்பரப்பு அருவிக்கு செல்ல 2 நாட்கள் அனுமதி இலவசம்


சிவாலய ஓட்டத்தையொட்டி திற்பரப்பு அருவிக்கு செல்ல 2 நாட்கள் அனுமதி இலவசம்
x
தினத்தந்தி 25 Feb 2022 10:51 PM IST (Updated: 25 Feb 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

சிவாலய ஓட்டத்தையொட்டி திற்பரப்பு அருவிக்கு செல்ல 2 நாட்கள் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவட்டார், 
சிவாலய ஓட்டத்தையொட்டி திற்பரப்பு அருவிக்கு செல்ல 2 நாட்கள் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 திற்பரப்பு அருவி
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதையொட்டி திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள். அருவிக்கு செல்ல ஒரு நபருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
மலையோர பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்ததால் கோதையார் ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் விழுகிறது. அருவிக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் தடுப்பணையில் உற்சாகமாக படகு சவாரி செய்து குதூகலத்துடன் வீடு திரும்பினர். 
அனுமதி இலவசம்
சிவராத்திரியையொட்டி வருகிற 28-ந் தேதி சிவாலய ஓட்டம் தொடங்குகிறது. சிவாலய ஓட்டம் ஓடும் பக்தர்கள் திற்பரப்பு அருவியில் குளித்து விட்டு அருகில் உள்ள 3-வது சிவாலயமான மகாதேவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இதையொட்டி வருகிற 28 மற்றும் 1-ந் தேதிகளில் அருவியில் குளிக்க கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு நாட்களும் அருவியில் இலவசமாக குளித்து மகிழலாம்.

Next Story