மீனவருக்கு சாகும் வரை சிறை தண்டனை


மீனவருக்கு சாகும் வரை சிறை தண்டனை
x
தினத்தந்தி 25 Feb 2022 10:52 PM IST (Updated: 25 Feb 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதித்த இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம், 
மனநலம் பாதித்த இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாலியல் பலாத்காரம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 48). மீனவரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி, மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது பெண் வீட்டில் தனியாக இருந்தபோது வீடு புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 
வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா மேற்கண்ட மீனவர் கருப்பசாமிக்கு சாகும் வரை சிறை தண்டனையும் ரூ.13 ஆயிரம் அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். 
வாழ்வாதார உதவி
மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மனநலம் பாதித்த 19 வயது பெண்ணிற்கு இலவச சட்ட உதவி மையம் தேவையான வாழ்வாதார உதவிகளை செய்வதற்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.

Next Story