1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Feb 2022 10:57 PM IST (Updated: 25 Feb 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் பகுதியில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 1 பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் பகுதியில் உள்ள டீக்கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக மாநகர் நல அலுவலர் இந்திராவுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், கீதா, செல்வராணி மற்றும் அதிகாரிகள் திண்டுக்கல் மேற்குரதவீதி பகுதியில் உள்ள சாலையோர கடைகள், டீக்கடைகளில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பைகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளில் இருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் கிழக்கு, மேற்கு ரதவீதிகள், பெரியகடைவீதி, பழனி ரோடு, தாடிக்கொம்பு ரோடு, மார்க்கெட் தெரு, மவுன்சுபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். 

அப்போது 150-க்கும் மேற்பட்ட கடைகள், ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர்.

Next Story