வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மேல்நிலை, உயர்நிலை பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கோபி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, சுந்தர், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கணினி ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன் உட்பட பலர் பேசினர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வுகளுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பார்வையாளராகவும், கணினி ஆசிரியர்களை தொழில்நுட்ப உதவியாளராகவும் மாநிலத்தின் கடைக்கோடியில் பணி நியமனம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முறையான பணி நியமன ஆணை வழங்காமல் தொலைபேசி மூலம் ஒருநாள் முன்னதாக தகவலை தெரிவித்து தேர்வு பணியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சங்க மாவட்ட பொருளாளர் மேனகா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story