உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை


உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2022 12:53 AM IST (Updated: 26 Feb 2022 12:53 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண்ரெட்டி தெரிவித்துள்ளார்

செம்பட்டு,பிப்.26-
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண்ரெட்டி தெரிவித்துள்ளார்.
மீட்க நடவடிக்கை
மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண்ரெட்டி தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்வதற்காக விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-  உக்ரைனில் சிக்கிதவிக்கும்இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் அவர்களை சாலை மார்க்கமாக அருகிலுள்ள ருமேனியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச்சென்றுஅங்கிருந்துமீட்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக ரஷியா, உக்ரைன் மற்றும் சுற்றியுள்ள நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ருமேனியாவில் எல்லைப்பகுதியில் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை காண்பித்தால் உள்ளே விடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். ருமேனியாவில்இருந்துவெளிவருவதற்கு பல்வேறு விமானங்கள் தயாராக உள்ளது. அங்கிருந்து டெல்லிஅழைத்துவரவும்நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
கட்டணமின்றி...
மத்திய அரசு எவ்வித கட்டணமின்றி அவர்களை இலவசமாக அழைத்து வரவே ஏற்பாடு செய்து வருகிறோம். விமான சேவையே தற்போது இல்லை என்று கூறுகிறார்கள். எப்படி டிக்கெட் ஒரு லட்ச ரூபாய் என்று அங்குள்ள மாணவர்கள் கூறுவார்கள். இந்திய தூதரகத்திலிருந்து நன்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இப்பிரச்சினை குறித்து பேச அனுப்பி வைத்துள்ளோம்.தற்போது, கொரோனாவில்  இருந்து விடுபட்டு வந்துள்ளோம். முழுவதுமாக விடுபட்ட பிறகு ரோடு ஷோ, சமூக வலைதளங்கள் மூலமாக சுற்றுலாத்துறை குறித்துபிரசாரம்மேற்கொள்ளப்படுகிறது. துபாயில் இந்தியாவின் சுற்றுலாத்துறைகுறித்தகண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது,நிரந்தரமாகஅமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கிய பிறகு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.. உள்நாட்டு சுற்றுலா வளத்தையும், பயணிகள் எண்ணிக்கையையும் பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story