சேலம் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
சேலம் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
கூலித்தொழிலாளி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஒரங்கூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வேப்பம்பட்டியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவருக்கு காசநோய் இருந்து வந்தது. இதனால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு 3-வது மாடியில் உள்ள காசநோய் பிரிவில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று காலை கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். வெகு நேரம் ஆகியும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அவர் கழிவறை ஜன்னல் கம்பியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து சத்தம் போட்டனர். இதுகுறித்து ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story