கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 26 Feb 2022 2:53 AM IST (Updated: 26 Feb 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

கெலவரப்பள்ளி அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி- ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஓசூர்:-
கெலவரப்பள்ளி அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி- ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அணை திறப்பு
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்காக 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.
அப்போது ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
22 கிராமங்கள் பயன்பெறும்
பின்னர் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது:-
ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் இடதுபுற பிரதான மற்றும் பிரிவு கால்வாய் மூலம் 5 ஆயிரத்து 918 ஏக்கர் மற்றும் வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2 ஆயிரத்து 82 ஏக்கர் என மொத்தம்8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன் அடைகின்றன. இதன்மூலம் ஓசூர், சூளகிரி தாலுகாவில் தட்டகானபள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாளி, அட்டூர், கதிரேபள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனபள்ளி, தொரப்பள்ளி, திருச்சிபள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகுள்ளு, பெத்த குள்ளு, சாமனபள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி உள்ளிட்ட 22 கிராமங்கள் பயன்பெறும்.
கெலவரப்பள்ளி அணையின் நீர் இருப்பு, அணைக்கு வரும் நீர்வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும். அடுத்த 5.நாட்களுக்கு தண்ணீைர நிறுத்தியும், 6 நனைப்புகளுக்கு மீண்டும் தண்ணீர் வழங்கப்படும். 
சிக்கனமாக...
தண்ணீர் திறந்துவிடப்படும் காலங்களில் வலது புற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 26 கன.அடி மற்றும் இடதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 62 கனஅடி என இரு கால்வாய்களில் மொத்தம் 88 கனஅடி நீர் வினாடி வீதம் திறந்து விடப்படும்.
எனவே, விவசாய பெருமக்கள், பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். 

Next Story