நேரு யுவகேந்திரா சார்பில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

நேரு யுவகேந்திரா சார்பில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 26 Feb 2022 6:17 PM IST (Updated: 26 Feb 2022 6:17 PM IST)
t-max-icont-min-icon

நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

குடியாத்தம்

நேருயுவகேந்திரா சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிகளில் வேலூர் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பிரேம்பாரத், தன்னார்வலர்கள் முத்துராஜ், தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது நேரு யுவகேந்திரா குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், மழை நீர் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. விழிப்புணர்வு நாடகத்தை ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Next Story