உடல் ஆரோக்கியத்துக்கு போலீசார் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் வேலூர் சரக டி.ஐ.ஜி. பேச்சு
உடல் ஆரோக்கியத்துக்கு போலீசார் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உடற்பயிற்சி முகாமில் வேலூர் சரக டிஐஜிஆனிவிஜயா கூறினார்.
வேலூர்
உடல் ஆரோக்கியத்துக்கு போலீசார் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உடற்பயிற்சி முகாமில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.
உடற்பயிற்சி முகாம்
வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் உடல்நலத்தை மேம்படுத்தவும், மனஅழுத்தத்தை குறைக்கவும் உடற்பயிற்சி முகாம் வேலூர் நேதாஜி மைதானத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.
வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமை தாங்கி உடற்பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. போலீசார் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஓட்டல்களில் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குடும்பத்துடனும் செய்யும் வேலையையும் முழுமையாக செய்ய முடியும். எனவே சந்தோஷமாகவும், மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் உங்களை ரசிக்க வேண்டும். இல்லாவிட்டாலும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை மகிச்சியாக இருக்கும்...
குடும்பம், வேலை மற்றும் உலகத்தை ரசிக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்வில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். உங்கள் திறமை மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த திறமையை வெளிக்கொண்டு வந்து சாதனை புரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் உடற்பயிற்சி பெற்றனர். உடற்பயிற்சிக்கு பின்னர் போலீசாரிடம் கோரிக்கைகள் மற்றும் குறைகளை டி.ஐ.ஜி. கேட்டறிந்தார்.
இனிமேல் வாரந்தோறும் சனிக்கிழமையன்று போலீசாருக்கு உடற்பயிற்சி முகாம் நடைபெறும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story