பெண்குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 12 கிலோ மீட்டர் தூரம் நடந்த மினி மாரத்தானில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


பெண்குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 12 கிலோ மீட்டர் தூரம் நடந்த மினி மாரத்தானில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
x
தினத்தந்தி 26 Feb 2022 7:32 PM IST (Updated: 26 Feb 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 12 கி.மீ.தூரம் நடந்த மினி மாரத்தான் ஓட்டம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்து பங்கேற்பு

ஜோலார்பேட்டை

பெண்குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 12 கிலோ மீட்டர் தூரம் நடந்த மினி மாரத்தானில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மினி மாரத்தான் ஓட்டம்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் மினி மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தாமலேரிமுத்தூர் மேம்பாலம் முதல் நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை தொடர்ந்து 12 கிலோமீட்டர் தூரம் வரை மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்ற இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து அவரும் 12 கிலோமீட்டர் தூரம் வரை ஓடினார்.
இறுதியாக நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஓட்டம் நிறைவடைந்தது. பின்பு தொடர்ந்து 12 கிலோமீட்டர் தன்னுடன் இடைவிடாமல் வந்த 2 பெண் காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

பேட்டி

அதன் பிறகு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண் குழந்தைகள் மீது ஆசிரியர்களும் பெற்றோர்களும் தனி கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்க வேண்டும். 

நம்முடைய தாயும் பெண் பிள்ளையும் பெண் என்பதை மனதில் வைத்து பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு வரும்போது அவர்களுடன் பேசி இன்று பள்ளியில் என்ன நடந்தது? ஆசிரியர் என்ன பாடம் நடத்தினார்? உடல் நலம் எப்படி உள்ளது என கேட்க வேண்டும் அவர்களுடன் நட்பாகப் பழகி பேசி பாதுகாக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் அந்த குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டு விடும். இதனால் கண்டிப்பாக பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை தினசரி கவனிக்க வேண்டும்.

சகிப்புத்தன்மை

காவல் துறை என்பது மற்ற துறை போல மாலை 6 மணிக்கு பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் துறை அல்ல. இரவு நேரமும் பணிகளை செய்யும் துறை. அதுமட்டுமின்றி காவலர்கள் அனைவரிடமும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மன தைரியம் கிடைக்கும்.

இதனால் எந்த வேலையும் நன்றாக செய்ய முடியும் உடல் நலம் பாதுகாக்கப்பட வேண்டும் அப்பொழுது தான் மனரீதியான எந்த பணிகளை சிறப்பாக பணயாற்ற முடியும் இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ் பாண்டியன் (வாணியம்பாடி), சாந்தலிங்கம் (திருப்பத்தூர்), நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உள்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.

Next Story