மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
கன்னிவாடி அருகே மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கன்னிவாடி:
கன்னிவாடி அரசு மருத்துவமனை சார்பில், மணியகாரன்பட்டி கருணை இல்லத்தில் ஆதரவற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு வட்டார மருத்துவ அதிகாரி செல்லமுத்து தலைமை தாங்கினார்.
முகாமில் மாணவ மாணவிகளுக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் குறித்து சுகாதாரத்துறையினர் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் கருணை இல்லத்தில் சமையல் பணியில் ஈடுபடுவோர் 6 மாதத்துக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. முகாமில் டாக்டர் அங்கம்மாள், சுகாதார ஆய்வாளர் கோபால் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story