கையேடு காணொலி பதிவு தொடக்கம்
கையேடு காணொலி பதிவு தொடக்கம்
உடுமலை:
ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான கையேடு தயாரிக்க, காணொலிப்பதிவு தொடங்கியது.
காணொலிப்பதிவு
மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம் சார்பில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குஇணையதளம் வழியிலான பணித்திறன் மேம்பாட்டுப்பயிற்சி கையேடு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் உடுமலையை அடுத்து திருமூர்த்திநகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பள்ளி தலைமைப்பண்பு மற்றும் பள்ளி அளவிலான மதிப்பீடு என்னும் 2 பயிற்சி கையேடு சார்ந்த காணொலிப் பதிவுப் பணிதொடங்கியது. இந்த ஆன் லைன் வழியிலான மேம்பாட்டு பயிற்சிக்கு கையேடு தயாரிப்பதற்கான, காணொலிப்பதிவு செய்யும் பணியை திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் வீ.சங்கர் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
இதற்கான பணிமனையின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கருத்தாளர்களாக பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, சுப்பிரமணி, சரவணகுமார் ஆகியோர் செயல்படுகின்றனர்.
கலந்து கொண்டவர்கள்
இந்த காணொலி பதிவில் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மணிமேகலை, உடுமலை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வே.சின்னராசு, அருள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சுபத்ரா, திருமூர்த்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இந்த பணிமனையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காணொலிகளை பதிவு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story