பர்கூர் அருகே பாலேப்பள்ளியில் 250 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா


பர்கூர் அருகே பாலேப்பள்ளியில்  250 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா
x
தினத்தந்தி 26 Feb 2022 10:13 PM IST (Updated: 26 Feb 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே பாலேப்பள்ளியில் 250 காளைகள் பங்கேற்ற எருது விடும் திருவிழா நடைபெற்றது.

பர்கூர்:
பர்கூர் அருகே பாலேப்பள்ளியில் 250 காளைகள் பங்கேற்ற எருது விடும் திருவிழா நடைபெற்றது.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பர்கூர் அருகே உள்ள பாலேப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. 
விழாவில் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பர்கூர், சாம்பல் பள்ளம், கந்திலி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. அரசின் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் படி தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு அதன் நடுவே காளைகள் ஒவ்வொன்றாக ஓட விடப்பட்டன. 
பரிசுகள்
இந்த காளைகள் சீறிபாய்ந்து ஓடின. குறிப்பட்ட நேரத்தில் 125 மீட்டர் தூரத்திற்கு சென்று இலக்கை எட்டிய காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த எருது விடும் விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். முன்னதாக கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்யப்பட்ட பிறகு எருது விடும் விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.

Next Story