சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு முயற்சி பள்ளி தலைமை ஆசிரியையிடம் அதிகாரிகள் விசாரணை பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு முயற்சி பள்ளி தலைமை ஆசிரியையிடம் அதிகாரிகள் விசாரணை பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Feb 2022 10:13 PM IST (Updated: 26 Feb 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியையிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியையிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொன்னம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் அதேபகுதியை சேர்ந்த கிரிஜா சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இதனிடையே மாணவ-மாணவிகளுக்கு குறைவான முட்டை வழங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் சாந்திக்கும். சத்துணவு அமைப்பாளர் கிரிஜாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர் கிரிஜா தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதை அவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். இதையடுத்து சத்துணவு அமைப்பாளர் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
பெற்றோர் முற்றுகை
இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு உதவியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என வலியுறுத்தி மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை   முற்றுகையிட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.‌  இதையடுத்து அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story