கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு


கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 27 Feb 2022 12:33 AM IST (Updated: 27 Feb 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டினர்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் சாய்சாலினி. இவர் பள்ளியின் சார்பில் அவுரங்கபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அகில இந்திய குடிமக்கள் மேம்பாட்டு மையம் மாணவிகளுக்காக இணைய வழியாக  நடத்திய ஓவியப் போட்டி மற்றும் கையெழுத்து போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவி சாய்சாலினி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசை வென்றார். முதல் பரிசை பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் சுதர்சனம், தலைமை ஆசிரியர் ரோஹிணி தேவி மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 


Next Story