அடுத்த மாதம் மதுரை-சிங்கப்பூர் விமான சேவை
அடுத்த மாதம் மதுரை-சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
மதுரை,
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் சர்வதேச விமான சேவைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை இருந்தது. இந்தநிலையில், மார்ச் 29-ந் தேதி முதல் வாரத்திற்கு 2 நாட்கள் (செவ்வாய் மற்றும் சனிக்கிழமை), சிங்கப்பூருக்கு மீண்டும் விமானம் இயக்கப்பட உள்ளது.
அதன்படி சிங்கப்பூரில் இருந்து (சிங்கப்பூர் நேரப்படி) மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 6.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும். தொடர்ந்து அதே விமானம் மதுரையில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடையும். மதுரை-சிங்கப்பூர் விமான சேவைக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story